பெட்டிக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு


பெட்டிக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 May 2021 12:31 AM IST (Updated: 17 May 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

பெட்டிக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே பி.மேட்டுபட்டியை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 34). இவர் அங்கு பெட்டி கடை வைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக கடையை மூடியிருந்தார். அதே ஊரை சேர்ந்த ராம்குமார் (23) என்பவர் கடையில் இருந்து பொருட்கள் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஊரடங்கு காரணத்தால் கடையை திறக்க முடியாது என கூறிய புவனேஷ்வரனை அரிவாளால் ராம்குமார் வெட்டியுள்ளார். காய மடைந்த புவனேஷ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

Next Story