மதுபாட்டில்கள் விற்ற 34 பேர் கைது


மதுபாட்டில்கள் விற்ற 34 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2021 12:47 AM IST (Updated: 17 May 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்றதாக 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, மே:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, மது விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 314 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story