மண்புழு உர கூடங்கள் பராமரிக்கப்படுமா?
வெம்பக்கோட்டை பகுதிகளில் மண்புழு உரகூடங்களை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் மண்புழு உரகூடங்களை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்புழு உர கூடங்கள்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் மண்புழு உர கூடங்கள் அமைக்கப் பட்டன.
இயற்கையில் கிடைக்கும் விவசாய கழிவுகளான இலை, தலை, போன்றவற்றை கொண்டு அமைக்கப்பட்ட தொட்டியில் மண்புழுக்கள் எச்சங்களை சிறு, சிறு உருண்டைகளாக வெளியேற்றுகிறது. இதனையே மண்புழு உரமாக பயன்படுத்துகிறோம். மண்புழு உரத்தில் தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை உள்ளது.
கிலோ ரூ.7
மண்புழு உரம் 45 முதல் 60 நாட்களில் தயாராகிறது. விவசாயிகளுக்கு கிலோ ரூ.7 முதல் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
செயற்கை உரத்தை விட மிகவும் குறைவான விலை என்பதால் விவசாயிகள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். மக்கும் குப்பைகளை உடனடியாக மாற்ற மண்புழு உரம் உதவுகிறது. சிறுதானிய பயிர்கள், வாழை, தென்னை, சோளம், மக்காச்சோளம், கரும்பு, பருத்தி கொய்யா, சப்போட்டா, மா, மரங்களுக்கு மண்புழு உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இவ்வாறு பல்வேறு நன்மைகளை அளிக்கும் மண்புழு உரங்களை தயாரிக்க கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை பகுதிகளை சேர்ந்த கங்கரக்கோட்டை, கொம்மங்கியாபுரம், இ.எல். ரெட்டியாபட்டி, சங்கரபாண்டியபுரம், தாயில்பட்டி , விஜயரெங்காபுரம், மேலகோதை நாச்சியார்புரம், கணஞ்சாம்பட்டி, ஜெகவீரம்பட்டி, சூரார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மண்புழு உர கூடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
எனவே இந்த மண்புழு உர கூடங்களை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.
Related Tags :
Next Story