கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி


கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2021 1:21 AM IST (Updated: 17 May 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பெரம்பலூர்:

2 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 173 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 36 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 30 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 16 பேரும் என மொத்தம் 255 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,661 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் ஏ.வி.ஆர். ரோட்டை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணும், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குன்னம் தாலுகா காரைப்பாடி கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் 1,478 பேர்
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 3,145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,478 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story