ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஆலங்குளம், மே:
ஆலங்குளம் - அம்பை சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் ஆலங்குளம் தாலுகா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக ெதரிவித்தார்.
அப்போது தாசில்தார் பட்டமுத்து, மருத்துவ அலுவலர் (பொறுப்பு) கீதா, டாக்டர்கள் சுபாஷினி, பிராத்தனா, சித்த மருத்துவர் சுப்புலட்சுமி, பல் மருத்துவர் திலகவதி, யோகா மருத்துவர் நீலவேணி, சுகாதார மேற்பார்வையாளர் ஹரிகர சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், ராதா, கணபதி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் சாந்தகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story