சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி-புதிதாக 822 பேருக்கு நோய் தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். புதிதாக 822 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். புதிதாக 822 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 829 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 822 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 383 பேர், ஓமலூரில் 25 பேர், சங்ககிரியில் 32 பேர், வீரபாண்டியில் 35 பேர், ஆத்தூரில் 34 பேர், வாழப்பாடியில் 35 பேர், பனமரத்துப்பட்டியில் 25 பேர், எடப்பாடியில் 17 பேர், மகுடஞ்சாவடியில் 24 பேர், கொங்கணாபுரத்தில் 23 பேர் என மாவட்டம் முழுவதும் 822 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 பேர் பலி
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 158 பேர் குணம் அடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 4 ஆயிரத்து 969 பேர் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story