திருவனந்தபுரம்-மேற்கு வங்காளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்


திருவனந்தபுரம்-மேற்கு வங்காளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 17 May 2021 2:45 AM IST (Updated: 17 May 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரம்-மேற்கு வங்காளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சூரமங்கலம்:
பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக திருவனந்தபுரம்-மேற்கு வங்காளம் மால்டா டவுன் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயிலை (வண்டி எண் 06185) ரெயில்வே நிர்வாகம் இயக்குகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை மறுதினம் அதிகாலை 5.22 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்டிரல், நெல்லூர், விஜயவாடா வழியாக 3-ம் நாள் இரவு 8.10 மணிக்கு மேற்கு வங்காளம் மால்டா டவுன் ரெயில் நிலையம் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் மேற்கு வங்காளம் மால்டா டவுன் -திருவனந்தபுரம் (வண்டி எண் 06186) அதிவிரைவு சிறப்பு ரெயில் மேற்கு வங்காளம் மால்டா டவுன் ரெயில் நிலையத்திலிருந்து வரும் 21-ந் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 23-ந் தேதி காலை 9.52 மணிக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக 3-ம் நாள் இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த தகவலை சேலம்ரெயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

Next Story