முதல்-அமைச்சரின் பொது நிவாரணநிதிக்காக உண்டியல் சேமிப்பு பணத்தை எம்.எல்.ஏ.விடம் வழங்கிய பள்ளி மாணவன்


முதல்-அமைச்சரின் பொது நிவாரணநிதிக்காக உண்டியல் சேமிப்பு பணத்தை எம்.எல்.ஏ.விடம் வழங்கிய பள்ளி மாணவன்
x
தினத்தந்தி 17 May 2021 6:02 AM IST (Updated: 17 May 2021 6:02 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம், முதல்-அமைச்சரின் பொது நிவாரணநிதிக்காக உண்டியல் சேமிப்பு பணத்தை எம்.எல்.ஏ.விடம் வழங்கிய பள்ளி மாணவன்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் சேகர். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய தீபக் மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் கிஷோர் (11) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கிஷோர் தனது தந்தையிடம் செலவுக்காக பெற்றுக்கொள்ளும் பணத்தில் உண்டியல் மூலம் சிறுக சிறுக சேர்த்து வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையொட்டி, தமிழக முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனை அறிந்த சிறுவன் கிஷோர் தான் சேமித்து வைத்திருந்த ரூ.2,800-ஐ முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சேர்த்திடுமாறு வெங்கல் கிராமத்திற்கு வந்த பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமியிடம் வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த சிறுவனை சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் கன்னிகைபேர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, கன்னிகைபேர் ஏரி பாசன சங்கதலைவர் துரைராஜ் தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வான டி.ஜே.கோவிந்தராசனிடம் வழங்கினார்.

Next Story