புதுச்சேரி கவர்னருடன், தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எம்.பி. வைத்திலிங்கம் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனிபால் கென்னடி, சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துதல் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.
அதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது;-
புதுவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் தொற்று பாதித்த நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான சிசிக்சை அளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அரசின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழக மக்களுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதை போல புதுவையிலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story