கொரோனா சிகிச்சை மையங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை பகுதியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜி.லட்சுமி பிரியா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா உள்நோயாளிகள் பிரிவில் காய்ச்சல் மற்றும் பரிசோதனை நடைபெற்று வருவதை பார்வையிட்டார். மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வரும் பிரிவு, கடுமையான சுவாச நோய்த்தொற்று பாதிக்கபட்டவர்களுக்கான சிகிச்சை பிரிவு, கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு, திரவ ஆக்சிஜன் சேமிப்பு அலகு போன்றவற்றையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து போளூர் சாலை தந்தை பெரியார் நகரில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம், முத்து விநாயார் கோவில் தெருவில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி, திருமஞ்சன கோபுர வீதியில் நடைபெற்று வரும் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், அஜீஸ் காலனியில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை, நல்லவன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களையும் ஆய்வு மேற்கொண்டார்.
தண்டராம்பட்டு
மேலும் அவர் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் பிரிவு மற்றும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஜெய்பீம் நகர் ரேஷன்கடையில் கொரோனா நிவராண உதவித்தொகை வழங்குவதையும் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story