கள்ளக்குறிச்சியில் 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு


கள்ளக்குறிச்சியில் 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 17 May 2021 4:55 PM GMT (Updated: 17 May 2021 4:55 PM GMT)

கள்ளக்குறிச்சியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி

கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சிகிச்சை பலன் இன்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15 ஆயிரத்து 846 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 500 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

10 தெருக்களில் தடுப்புகள்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகரப்பகுதிகளில் 800-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 தெருக்களில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story