மாவட்ட செய்திகள்

சேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை + "||" + Request

சேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மேட்டுத்திருக்காம்புலியூரில் சேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
கிருஷ்ணராயபுரம்
சேதமடைந்த படித்துறை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து மேட்டுத்திருக்காம்புலியூர் வழியாக புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அனைவரும் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், இந்த வாய்க்கால் படித்துறையைதான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியல் வெற்றிலை விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலையை பறித்து விற்பனைக்கு அனுப்பும் போது இந்த வாய்க்கால் படித்துறையில் இறங்கி வெற்றிலை மூட்டைகளை தண்ணீரில் நனைத்து எடுத்து செல்வார்கள்.இப்படி அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த படித்துறை தற்போது கற்கள் பெயர்ந்து, சேதமடைந்து காணப்படுகிறது.
கோரிக்கை 
அதை சுற்றிலும் முற்களும், செடிகளும் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் சிலர் சில நேரங்களில் அதில் விழுந்து காயம் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. இதனால் தற்போது அந்த படித்துறை யாரும் பயன்படுத்தாமல் கிடக்கிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடடினயாக சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சாலையோர கால்வாய்களை தூர்வார கோரிக்கை
எஸ்.புதூர் பகுதியில் சாலையோர கால்வாய்களை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
3. சிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும்-போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை
சிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
4. ரேஷனில் தரமான அரிசி வழங்க கோரிக்கை
வாராப்பூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
5. நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.