மாவட்ட செய்திகள்

தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுவினரிடம் கடன் வசூலிக்க கூடாது-தி.மு.க.கோரிக்கை + "||" + Request

தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுவினரிடம் கடன் வசூலிக்க கூடாது-தி.மு.க.கோரிக்கை

தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுவினரிடம் கடன் வசூலிக்க கூடாது-தி.மு.க.கோரிக்கை
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுவினரிடம் கடன் வசூலிக்க கூடாது என்று தி.மு.க. கோரிக்கை விடுத்து உள்ளது.
சிவகங்கை,

சிவகங்கை தி.மு.க. நகர செயலாளர் சி.எம்.துரை ஆனந்த் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மகளிர் தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை சீர் செய்யும் வகையில், தங்கள் வாழும் பகுதிகளில் குழுக்கள் அமைத்து தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று அதன் தொகையைக் குழு உறுப்பினர்களுக்கு பிரித்து தருகின்றனர். அதன் கடன் தொகையை வாரத்திற்கு ஒரு நாள் கூட்டம் கூட்டி அதன் தலைவி மூலம் கடன் தொகை வசூல் செய்துசெலுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையிலும் மக்கள் நலன் காக்கும் வகையிலும் தமிழக அரசு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் நலன் கருதி, ரேஷன் கடைகளின் மூலம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை அறிந்து தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுத் தலைவி மூலமாக கடன் தொகையை வசூல் செய்ய வலியுறுத்தி வருகின்றனர் என்பதை அறிகின்றோம். மக்களின் வாழ்வாதாரம் நலன் கருதி இக்காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்களிடம் கடன் தொகையை வசூல் செய்வதை நிறுத்துமாறு தி.மு.க. சார்பில் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை
சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
2. துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை
துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை
3. பனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை
பனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4. கூட்டுறவு சங்கம் மூலம் விரைந்து கடன் வழங்க வேண்டும் கள்ளக்குறிச்சியல் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கூட்டுறவு சங்கம் மூலம் விரைந்து கடன் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சியல் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்
5. நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.