ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா
x
ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 17 May 2021 6:54 PM GMT (Updated: 17 May 2021 6:54 PM GMT)

ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா

கோவை


தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் கோவையில் தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்படி நேற்று கோவையில் புதிதாக 3 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.]

 இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 804 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது பெண், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வந்த 4 பெண்கள், 9 ஆண்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது.

 மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 1,244 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். 
கோவையில் இதுவரை 93 ஆயிரத்து 723 பேர் கொரோனாவில் இருந்து குணமடை ந்துள்ளனர். தற்போது 24 ஆயிரத்து 195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story