விதிமுறைகளை மீறிய 13 கடைகளுக்கு அபராதம்


விதிமுறைகளை மீறிய 13 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 May 2021 7:29 PM GMT (Updated: 17 May 2021 7:29 PM GMT)

விதிமுறைகளை மீறிய 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் தூய்மை பணி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை மீறிய மளிகை கடை, மருந்து கடை, வெற்றிலைக்கடை உள்ளிட்ட 13 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Next Story