மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி + "||" + One person was killed when he was hit by a train

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
ரெயிலில் அடிபட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி வடக்கு பகுதி ரெயில்வே தண்டவாளத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இளஞ்சிவப்பு நிற சட்டையும், கட்டம் போட்ட கைலியும் அணிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று அப்பகுதி மக்களிடம், ரெயில்வே போலீசார் விசாரித்தனர். இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடிபோதையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரெயிலில் பயணித்தபோது தவறி விழுந்து இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயிலில் அடிபட்டு மிளா சாவு
ரெயிலில் அடிபட்டு மிளா பரிதாபமாக இறந்தது.
2. ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.