மேலும் 191 பேருக்கு கொரோனா


மேலும் 191 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 May 2021 7:29 PM GMT (Updated: 17 May 2021 7:29 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சி பகுதியில் 22 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 6 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 30 பேரும், திருமானூர் ஒன்றிய பகுதியில் 19 பேரும், செந்துறை ஒன்றிய பகுதியில் 16 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 29 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 31 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 37 பேரும், வெளி மாவட்டத்தில் இருந்து வசிப்பவர்களில் ஒருவருக்கும் என மொத்தம் 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,775 ஆக உயர்ந்துள்ளது. இதில் 62 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,244 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,469 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 51 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1,289 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 854 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 90 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 944 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story