காய்கறி, இறைச்சி கடைகள் இடமாற்றம்


காய்கறி, இறைச்சி கடைகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 18 May 2021 8:35 PM GMT (Updated: 18 May 2021 8:35 PM GMT)

அரியலூரில் காய்கறி, இறைச்சி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

அரியலூர்:

கடைகள் இடமாற்றம்
அரியலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு தினமும் வந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. மேலும் அங்கு சமூக இடைவெளி இல்லாமல் அனைவரும் நெருங்கி நின்று பொருட்கள் வாங்கியதால் கொரோனா பரவும் அபாயம் இருந்தது. நேற்று முன்தினமும் அரியலூர் காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.
இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால், அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் நகரில் உள்ள சாலையோர கடைகள் அனைத்தையும் அரசு மேல்நிலைப்பள்ளி, காமராஜர் திடல் ஆகிய இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மாற்றியது.
சமூக இடைவெளியுடன் வியாபாரம்
இதைத்தொடர்ந்து நேற்று முதல் அனைத்து கடைகளும் அந்த இடங்களுக்கு முழுவதுமாக மாற்றப்பட்டன. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடைபெற்றது. பொதுமக்கள், அங்கு அமைக்கப்பட்ட தரைக்கடைகளில் காய்கறிகளை உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்றனர்.

Next Story