அம்மா மினி கிளினிக்கில் அமைச்சர் ஆய்வு


அம்மா மினி கிளினிக்கில் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 5:44 AM GMT (Updated: 20 May 2021 5:44 AM GMT)

மீஞ்சூரை சுற்றியுள்ள பகுதிகளில், அம்மா மினி கிளினிக்கில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

மீஞ்சூர், 

மீஞ்சூரை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை அதிக அளவில் பரவி வருகிறது. வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து கேட்டறிந்தார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஆகியோர் உடனிருந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜேஷ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துக்கூறினார்.

இதனை தொடர்ந்து அனுப்பம்பட்டு கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதை நேரில் சென்று அமைச்சர் நாசர் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகளை அமைச்சரும், கலெக்டரும் ஆய்வு செய்தனர். அப்போது மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், பொன்னேரி பேரூர் செயலாளர் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், தமிழன் இளங்கோ உட்பட பலர் உடனிருந்தனர்.

Next Story