கொரோனாவிடம் இருந்து பணியாளர்களை காக்க கைகளை சுத்தம் செய்ய காலால் இயக்கும் தண்ணீர் குழாய்கள்


கொரோனாவிடம் இருந்து பணியாளர்களை காக்க கைகளை சுத்தம் செய்ய காலால் இயக்கும் தண்ணீர் குழாய்கள்
x
தினத்தந்தி 20 May 2021 9:50 AM GMT (Updated: 20 May 2021 9:50 AM GMT)

கொரோனாவிடம் இருந்து பணியாளர்களை காக்க கைகளை சுத்தம் செய்ய காலால் இயக்கும் தண்ணீர் குழாய்கள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு வரும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும், பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக, காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களை தலைமைச் செயலகத்தின் முக்கிய வாயில்களில் அமைத்து, கைகளை சுத்திகரிப்பான் உபயோகித்து கழுவிச் செல்லும் வசதியை நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், “கைகளை சோப்புப்போட்டு நன்கு கழுவுவோம், கொரோனாவை முற்றிலும் அழிப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துக்கு இணங்க, கொரோனா சங்கலியை உடைத்தெறிவதற்கு இந்த வசதியை அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த தண்ணீர் குழாய் அருகே சானிடைசர் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story