நீடாமங்கலத்தில் சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றும் பணி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


நீடாமங்கலத்தில் சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றும் பணி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

நீடாமங்கலத்தில் சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றும் பணி காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ரெயில் நிலையம் நாகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு ரெயில் வரும்போதெல்லாம் நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட தாமதமானாலோ, ரெயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டாலோ, சிக்னலில் கோளாறு ஏற்பட்டாலோ ரெயில்வே கேட் பல மணி நேரம் மூடப்படுகிறது. ரெயில்களில் என்ஜினை திசை மாற்றும் பணி, பெட்டிகளை இணைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்காகவும் ரெயில் கேட் மூடப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

சரக்கு ெரயில்

இந்த நிைலயில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு காலி பெட்டிகளுடன் கூடிய சரக்கு ெரயில் நேற்று அதிகாலை 4.55 மணிக்கு வந்தது. இதற்காக ெரயில்வே கேட் அதிகாலை 4.50 மணிக்கு மூடப்பட்டது. சரக்கு ெரயிலின் என்ஜினை திசை மாற்றும் பணி ஒரு மணிநேரம் நடந்தது. இந்த பணி முடிவடைந்ததும், சரக்கு ெரயில் மன்னார்குடிக்கு 5.50 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதன்பின்னரே ெரயில்வே கேட் திறக்கப்பட்டது.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலத்தில் மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். தஞ்சை முதல் நாகை வரை இருவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். நீடாமங்கலத்தையும், வையகளத்தூரையும் இணைக்கும் வகையில் பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் பால பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தான் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பது பல்வேறு தரப்பினரின் கருத்தாக உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story