கிணத்துக்கடவில் கொரோனா விதிகளை மீறிய 150 பேருக்கு அபராதம்


கிணத்துக்கடவில் கொரோனா விதிகளை மீறிய 150 பேருக்கு அபராதம்
x

கிணத்துக்கடவில் கொரோனா விதிகளை மீறிய 150 பேருக்கு அபராதம்

கிணத்துக்கடவு

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து இருப்பதால் அதற்கு மேல் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் போலீசார் திடீரென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிகளை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றியவர்கள், முகக்கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல் உள்பட பல்வேறு காரணங்களுக்காக 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் ஊரடங்கை மீறி வெளியே வந்த 5 பேரிடம் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

அதுபோன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் இருந்தது உள்பட விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. 


Next Story