கர்நாடகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் தாய் கொரோனாவுக்கு பலி


கர்நாடகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் தாய் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 20 May 2021 6:14 PM GMT (Updated: 2021-05-20T23:44:08+05:30)

கர்நாடகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் தாய் கொரோனாவுக்கு பலி

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் குடச்சி தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ராஜுவ். இவரது தாய் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார். 

இந்த நிலையில், தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ராஜுவ் எம்.எல்.ஏ. தனது முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டுள்ளார். மேலும் முகநூலில் அவர் பேசி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராஜுவ் எம்.எல்.ஏ. பேசி இருப்பதாவது:-

கொரோனாவுக்கு எனது தாயை இழந்து பரிதவித்து வருகிறேன். என்னுடைய வீடே அமைதியாக காட்சி அளிக்கிறது. என்னை வளர்த்து ஆளாக்கிய தாயை இழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் அரசின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை யாரும் மீற வேண்டாம். என்னுடைய தாய் இறந்திருப்பதால் துக்கம் விசாரிக்க வேண்டும் என்றும் யாரும், என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story