மீன், கருவாடு விலை உயர்வு


மீன், கருவாடு விலை உயர்வு
x
தினத்தந்தி 20 May 2021 7:19 PM GMT (Updated: 20 May 2021 7:19 PM GMT)

மீன், கருவாடு விலை உயர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், மே
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் காலையிலேயே இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மீன், கருவாடு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அயிரை மீன் ஒரு கிலோ ரூ.1800-க்கு விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி 1 கிலோ ரூ.1000-க்கும், கோழி இறைச்சி 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மீன், இறைச்சி விலை அதிகமாக இருப்பதால் தற்போது பொதுமக்கள் கருவாடு அதிக அளவு வாங்கிச் செல்கின்றனர். கருவாடு விலையும் சற்று உயர்ந்துள்ளது. நெய் மீன் கருவாடு ஒரு கிலோ ரூ.2,600-க்கும், சூடை கருவாடு கிலோ ரூ.350 முதல் 400 ரூபாய்க்கும், நெத்திலி கருவாடு கிலோ ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. அதிக அளவு பொதுமக்கள் கருவாடு மற்றும் முட்டைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Next Story