ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11 பேர் மீது வழக்கு; இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11 பேர் மீது வழக்கு; இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 May 2021 8:24 PM GMT (Updated: 2021-05-21T01:54:24+05:30)

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கையொட்டி காலை 6 முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காரணங்களுக்காக மற்றும் தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்துக்கு உள்ளே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு பெறாமல் வெளியே சுற்றிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story