மாவட்ட செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Woman commits suicide by fire

பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் கீழமெக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சுகந்தி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சுகந்திக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும் என்றும், இதனால் சம்பவத்தன்று வீட்டில் அவர் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, தீயை அணைத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுகந்தியின் தந்தை செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
2. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. பெண் தீக்குளித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.