அந்தியூரில் கொரோனா நோயாளி சிகிச்சை மையத்தில் தற்கொலை


அந்தியூரில் கொரோனா நோயாளி சிகிச்சை மையத்தில் தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2021 9:20 PM GMT (Updated: 20 May 2021 9:20 PM GMT)

அந்தியூரில் கொரோனா நோயாளி சிகிச்சை மையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தியூர்
அந்தியூரில் கொரோனா நோயாளி சிகிச்சை மையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொரோனா நோயாளி
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, அம்மாபேட்டை, பவானி, ஜம்பை, குருவரெட்டியூர் ஆகிய வட்டாரங்களில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதேபோல் அந்தியூர் அருகே உள்ள கேத்தனூர் பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மையத்தில் இருந்த அவரை காணவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் பணியாளர்கள் அங்கும் இங்கும் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை மையத்தின் எதிரே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். 
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதைத்தொடர்ந்து அவரது உடல் கொரோனா விதிமுறையின் படி அடக்கம் செய்யப்பட்டது.

Next Story