வெளியே நடமாடிய கொரோனா நோயாளிகளிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் மாநகராட்சி நடவடிக்கை


வெளியே நடமாடிய கொரோனா நோயாளிகளிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 21 May 2021 11:28 AM IST (Updated: 21 May 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகள் ஒருசிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வருவதாக புகார்கள் வந்தது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் ஒருசிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து அவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், அதனையும்மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரும் நபர்களை சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புகார்கள் இருந்தால், சென்னை மாநகராட்சிக்கு 044-25384520 என்ற தொலைப்பேசியில் புகாராக தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதுவரை விதிகளை மீறி வெளியே நடமாடியதாக கொரோனா நோயாளிகள் 5 பேரிடமிருந்து தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனிவரும் நாட்களில் வெளியே வரக்கூடாது எனவும், மீறினால் கொரோனா பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் மாநகராட்சி அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தங்களது முழுஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Next Story