வீரபாண்டி அருகே வீட்டில் பிடிபட்ட நாகப்பாம்பு
வீரபாண்டி அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள எஸ்.பி.எஸ். காலனியை சேர்ந்தவர் காசிமாயன் (வயது45). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று காலை அவரது வீட்டில் பாம்பு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூரை சேர்ந்த பாம்பு பிடிப்பவரான ரகு என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 8½ அடி நீள நாகபாம்பை பிடித்தார். பின்னர் அந்த பாம்பு சின்னமனூர் வனத்துறை மூலம் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story