கூத்தாநல்லூரில் கொரோனா பரவல் ‘திடீர்’ அதிகரிப்பு 2 தெருக்களுக்கு ‘சீல்’
கூத்தாநல்லூரில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. 2 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இங்கு 24 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகளை நகராட்சி ஆணையர் லதா அறிவுறுத்தலின் பேரில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் அரசு அறிவித்த ஊரடங்கு நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் அதிகரிப்பு
இந்த நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கூத்தாநல்லூர் மஜ்ஜியா தெரு, லெட்சுமாங்குடி ராஜகோபாலசாமி தோட்டம் ஆகிய 2 தெருக்களும் வெளியாட்கள் நுழைய முடியாதபடி தடுப்புகளால் அடைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story