நன்னிலம் அருகே 2 கிராமங்களில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


நன்னிலம் அருகே 2 கிராமங்களில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2021 4:49 PM IST (Updated: 21 May 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே 2 கிராமங்களில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தளத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த 2 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டதில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே கிராமத்தில் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சி துறையை சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கிராம பகுதிக்குள் வெளியாட்கள் நுழைய முடியாதபடி தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வீதிவிடங்கன்

இதேபோன்று நன்னிலம் அருகே வீதிவிடங்கன் ஊராட்சியில் மந்தவெளி தெருவில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் நன்னிலம் அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 கிராமங்களில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஞானம், பொற்செல்வி மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story