கொரோனா நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை செல்வராஜ் எம்.பி. வழங்கினார்


கொரோனா நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை செல்வராஜ் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 21 May 2021 5:14 PM IST (Updated: 21 May 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை செல்வராஜ் எம்.பி. வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று செல்வராஜ் எம்.பி. வந்தார். தொடர்ந்து நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொேரானா சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து தனது ஒரு மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டர் பிரவீன் நாயரிடம் வழங்கினார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் 2-ம் அலையில் லட்ச கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இதில் பலர் சிகிச்சை பலன் இன்றி இறந்து வருகின்றனர். இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் போராடி வருகிறோம். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து மீட்க பல முயற்சிகள் எடுத்து வருவது பாராட்டத்தக்கது. கொரோனா நிவாரண நிதிக்காக எனது 1 மாத சம்பளம் ரூ.1 லட்சத்தை நாகை கலெக்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்.கடலோர மாவட்டமான நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்றார். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் தமீம் அன்சாரி, ஒன்றியச் செயலாளர் பாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story