எமதர்மன்-சித்ரகுப்தன் வேடமணிந்து ெகாரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
நாகையில் போலீசார் எமதர்மன்-சித்ரகுப்தன் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திடவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் நாகை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நாகை பெரிய கடைவீதியில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தினர். அப்போது கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பாடல்களை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்தனர்.
வெளிப்பாளையம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நாகை புதிய பஸ் நிலையம் அருகே எமதர்மன், சித்திரகுப்தன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
வேளாங்கண்ணி
இதேபோல திருப்பூண்டி கடைத்தெருவில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கும்படியும், அப்படி வெளியில் சென்றால் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கையை சுத்தம் செய்ய வேண்டும். தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றக்கூடாது உள்ளிட்டவைகளை கலைஞர்கள் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
அதேபோல் திருக்குவளை கடைதெருவிலும் கொரோனா கலைநிகழ்ச்சி நடந்தது. அதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கீழ்வேளூர் பஸ் நிலையம், கடைவீதி, கச்சனம் சாலை, தேவூர் சந்தைப்பேட்டை மற்றும் முக்கிய தெருக்களில் நாட்டுபுற இசை கலைஞர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் கீழ்வேளூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Tags :
Next Story