நல்லாம்பிள்ளை கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா; சுகாதார பணிகள் தீவிரம்
பட்டிவீரன்பட்டி அருகே நல்லாம்பிள்ளை கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதையடுத்து சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ராஜசேகரன், தாசில்தார் பவித்ரா, வட்டார மருத்துவ அலுவலர் பரத்கண்ணன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி, சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி ஆகியோர் நல்லாம்பிள்ளை கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அந்த கிராமம் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிராமத்திற்கு செல்லும் பாதைகள் தகரத்தால் அடைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த கிராமத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சேர்ந்து கிருமிநாசினி தெளித்தல், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சுகாதாரப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் இந்த கிராமத்தின் அருகில் உள்ள நெல்லூர் கிராமத்திலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களில் ஒருவர் சின்னாளபட்டி சித்த மருத்துவ மையத்திற்கும், மற்றொருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story