தாராபுரம் அரசு மருத்துவமனையில்உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தொடர்ந்து உணவு

தாராபுரம் அரசு மருத்துவமனையில்உணவின்றி தவித்து வருபவர்களுக்கு  தொடர்ந்து உணவு
x
தினத்தந்தி 21 May 2021 8:25 PM IST (Updated: 21 May 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அரசு மருத்துவமனையில்உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தொடர்ந்து உணவு

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2-ம் அலை அதிகரித்து அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவின்றி தவித்து வருபவர்களுக்கு  தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உணவு வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

Next Story