கொண்டம்பட்டி ஊராட்சியில் 144 பேருக்கு கொரோனா பரிசோதனை


கொண்டம்பட்டி ஊராட்சியில் 144 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 21 May 2021 8:32 PM IST (Updated: 21 May 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

கொண்டம்பட்டி ஊராட்சியில் 144 பேருக்கு கொரோனா பரிசோதனை

குடிமங்கலம்
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கொண்டம்பட்டி ஊராட்சியில் 144 பேருக்கு குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் உத்தரவின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
இதில் சுகாதார ஆய்வாளர் யோகானந்தம், கொண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் விஜயசாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story