தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மின்வாரிய ஊழியருக்கு கொரோனா


தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மின்வாரிய ஊழியருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 May 2021 8:34 PM IST (Updated: 21 May 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மின்வாரிய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு மின்பகிர்மான நிலைய அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
ஊழியருக்கு கொரோனா
 தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு மின்பகிர்மான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறஉதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த அலுவலக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, அலுவலகத்தை சுற்றிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். அந்த அலுவலகமும் மூடப்பட்டது.
இ்ந்த அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தவந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை மின்வாரிய ஊழியர்கள் வழங்கினார்கள். மேலும் மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
2 நாட்கள் செயல்படாது
பின்னர் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ 2 நாட்கள் இந்த அலுவலகம் செயல்படாது. திங்கள்கிழமை வழக்கம்போல் பணிகள் நடைபெறும். பொதுமக்கள் அன்று முதல் மின்கட்டணத்தை செலுத்தலாம்’ என அவர் தெரிவித்தார்.

Next Story