மடத்துக்குளத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம்மூடப்பட்டுள்ளது.
மடத்துக்குளத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம்மூடப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்
மடத்துக்குளத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம்மூடப்பட்டுள்ளது.
தாலுகா அலுவலகம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடத்தூர், கணியூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி, சோழமாதேவி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 12 பேருக்கும், மடத்துக்குளம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 10 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 நாட்களுக்கு தாலுகா மற்றும் பேரூராட்சி அலுவலகம் செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு மருத்துவமனை
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அலுவலக பணியாளர்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மடத்துக்குளம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் பூட்டப்பட்டது. இதற்கு பதிலாக பழைய கட்டிடத்தில் 3 நாட்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு கடிதம் ஒட்டபட்டது.
இவ்வாறு மடத்துக்குளம் பகுதியில் அரசு அலுவலகங்களில் உள்ள அரசு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து.
Related Tags :
Next Story