உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்களுக்குப்பதிலாக மாற்று எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்களுக்குப்பதிலாக மாற்று எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 21 May 2021 8:42 PM IST (Updated: 21 May 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்களுக்குப்பதிலாக மாற்று எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்களுக்குப்பதிலாக மாற்று எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோழித்தீவனம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மானாவாரியில் மட்டுமல்லாமல் பி.ஏ.பி. பாசனம், குளத்துப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம் மூலமும் மக்காச் சோளம் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் மக்காச் சோளத்தில் பெருமளவு கோழித் தீவனத்துக்காகவே விற்பனை செய்யப்படுகிறது. 
இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோழித் தீவனம் தவிர்த்த மாற்றுப் பயன்பாட்டுக்கு முதல் தர மக்காச் சோளங்களை விற்பனை செய்யும் வகையில் உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டது.
2-ம் தரம்
இந்த எந்திரங்களில்அறுவடை செய்து காய வைக்கப்பட்ட மக்காச் சோளங்களைக் கொட்டும் போது முதல் கட்டமாக பதர்கள், தூசிகள் வெளியேற்றப்படுகிறது.2-ம் கட்டமாக கற்கள், உலோகத் துகள்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இதனையடுத்து முதல் தரம், 2-ம் தரம், 3-ம் தரம் என 3 வகைகளாக தனித்தனியாக இந்த எந்திரம் பிரித்துக் கொடுக்கிறது.
இதன்மூலம் முதல் தர மக்காச்சோளத்தை பாப்கார்ன் உற்பத்தி, ஐஸ் கிரீம் தயாரிப்பு, ஸ்டார்ச், எண்ணெய் உற்பத்தி, புரதம் உற்பத்தி போன்ற மாற்றுப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவாகிறது. அதுபோல 2-ம் தர மக்காச் சோளத்தை மது உற்பத்தி, பயோ எத்தனால் தயாரிப்பு போன்ற பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய முடியும்.
எந்திரங்கள் வீணாகும் நிலை
இந்த எந்திரம் விவசாயிகள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், எந்திரம் நிறுவப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் விவசாயிகள் யாரும் இதனைப் பயன்படுத்த முன்வரவில்லை. இதனால் பயன்பாடில்லாமல் எந்திரங்கள் வீணாகும் நிலை உள்ளது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
உடுமலை பகுதியில் மக்காச்சோள உற்பத்தி என்பது கோழித்தீவன உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது.இதனால் மாற்றுப் பயன்பாடு குறித்து விவசாயிகள் யோசிப்பதும் இல்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை. அத்துடன் முதல் தர மக்காச் சோளத்தை விற்பனை செய்வதற்கான வழிகாட்டலும் இல்லை. இதனால் கோழித் தீவனத்துக்கு எதற்கு சுத்திகரிப்பு என்ற மனநிலையில் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரத்தைப் பயன்படுத்துவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 
மல்லி சுத்திகரிப்பு
அதேநரத்தில் முழுக்க முழுக்க மனிதர்கள் பயன்படுத்தி வரும் மல்லி, கொண்டைக் கடலை போன்றவை உடுமலை பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அவற்றை சுத்திகரிப்பதும் தரம் பிரிப்பதும் சிரமமான விஷயங்களாக உள்ளது. 
எனவே மக்காச் சோள சுத்திகரிப்பு எந்திரங்களுக்குப் பதிலாக கொண்டைக் கடலை, மல்லி போன்றவற்றை சுத்திகரிக்கும் வகையில் எந்திரங்களை வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த பயிர்களை சுத்திகரித்து, தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் உள்ளூரிலேயே நல்ல விலை பெற முடியும். 
எனவே தேவை உள்ள பகுதிக்கு மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரத்தை அனுப்பி விட்டு மாற்று எந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.

Next Story