கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 10 கடைகளுக்கு அபராதம்
கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 10 கடைகளுக்கு அபராதம்.
பந்தலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று வருவாய் ஆய்வாளர் ஜான் எட்வின் ராபர்ட், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது விதிகளை கடைபிடிக்காத 9 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கொளப்பள்ளி பஜாரில் கடை வைத்துள்ள சில வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் பிற வியாபாரிகளுக்கு கொரானா பரிசோதனை செய்து, முடிவு வரும் வரை கடைகள் திறக்கப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அங்கு ஒரு கடை மட்டும் திறந்து செயல்பட்டது. இதனால் அந்த கடைக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story