கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் 12 மயானங்களில் தகனம்


கொரோனாவால் இறந்தவர்களின்  உடல்கள் 12 மயானங்களில் தகனம்
x
தினத்தந்தி 21 May 2021 8:51 PM IST (Updated: 21 May 2021 8:51 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் 12 மயானங்களில் தகனம்

கோவை

கோவையில் கடந்த 4 நாட்களில் கொரோனாவுக்கு 70 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்கள் 12 மயானங்களில் தகனம் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா 2-வது அலை

கொரோனா தொற்றின் முதல் அலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் உயிர்பலி குறைவாகவே இருந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 7 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினர்.

 கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 55 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் 660 பேர் வரை இறந்தனர். 

பின்னர் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. அதன்பிறகு கொரோனா வேகமாக அதிகரித்தது. இதையொட்டி இறப்பு விகிதமும் அதிகரித்து உள்ளது.

4 நாட்களில்70 பேர் உயிரிழப்பு

கோவையில் மே மாதம் முதல் தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. இதனால் கொரோனா பாதிப்பால் கடந்த 17-ந் தேதி 14 பேரும், 18-ந் தேதி 19 பேரும், 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 20 பேர் என 4 நாட்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு அதிகரித்து வருவதால் கோவையில் உள்ள மின்மயானங்க ளில் நள்ளிரவு நேரத்திலும் இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய் யப்பட்டு வருகிறது. 

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடுக்கி பாதுகாப்பாக வைக்க ரேக் அடித்து ஏற்பாடு செய்யப்பட்டது.

கூடுதல் மயானங்கள்

கொரோனாவால் நாளுக்குநாள் இறப்பு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கோவையில் தற்போது 12 மயானங்களில் இறந்த வர்களின் உடல்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
 
இது குறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது

கொரோனா முதல் அலையின் போது இறப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது. 

தற்போது 2-வது அலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரட்டை இலக்கத்தில் இறப்பு உள்ளது. இதனால் இறந்தவர்க ளின் உடல்களை தகனம் செய்ய கூடுதல் மயானங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

புதர்களை அகற்றும் பணி

அதன்படி சரவணம்பட்டியில் 2 மயானம், சிங்காநல்லூர், நஞ்சுண்டா புரம், கவுண்டம்பாளையம், வீரகேரளம், துடியலூர், பீளமேடு, ஆத்துப்பாலம், சொக்கம்புதூர், போத்தனூர், சித்தாபுதூர் ஆகிய 12 மயானங்களில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்காக சிறு மயானங்க ளில் புதர்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story