நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு
நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு
கோவை
கொரோனா வழிகாட்டு மையங்களில் நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு தேவையான சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் கோவையில் கொரோனா பரவும் வேகம் அதிகமாகவே காணப்படுகிறது. தற்போது ஒரு நாளைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக் கப்படுகின்றனர்.
அவர்களுக்கு அரசு மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கொடிசியா, பாரதியார், காருண்யா உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா பாதிப்பால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படு கிறது. இதனால் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகமாக தேவைப்படு கிறது.
எனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வழிகாட்டும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு கணக்கிடப்படுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கான மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
வழிகாட்டு மையங்கள்
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது
கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி, அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் பள்ளி ஆகிய 3 இடங்களில் வழிகாட்டு மையங்கள் (ட்ரை ஏஜ் சென்டர்) அமைக்கப்பட்டது.
தற்போது கூடுதலாக மேற்கு மண்டலத்தில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ஒரு வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, ஆக்ஸி மீட்டர் உதவியு டன் சரிபார்க்கப்படுகிறது. இதில் 96-க்கு மேல் உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இணை நோயாளிகள்
94-க்கு மேல் உள்ளவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். 93-க்கு கீழே இருந்தால் அவர்கள் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் சி.டி.ஸ்கேன் மூலம் நுரையீரல் பாதிப்பு கணக்கிடப்படுகிறது. இதில் சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்களும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த வழிகாட்டு மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். எனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்கள் அருகில் உள்ள வழிகாட்டு மையத்தை முதலில் அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story