திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 39 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 39 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.
x
தினத்தந்தி 21 May 2021 9:14 PM IST (Updated: 21 May 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 39 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த 39 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. அரசு வழிகாட்டுதலுக்காக சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட வரும்படி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்தும் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
39 ஆயிரம் டோஸ் வருகை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதில் இருந்து தடுப்பூசி செலுத்த வருகிறவர்களின் எண்ணிக்கையும் மாவட்டத்தில் அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் முதல் டோஸ் செலுத்திய வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டு செலுத்தப்படுகிறது.
பொதுமக்கள் பலரும் பல இடங்களில் குவிந்து வருவதால் டோக்கன் வினியோகம் செய்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 வயது முதல் 45-வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நேற்று முன்தினம் திருப்பூரில் தொடங்கிவைத்தார். இதனால் இந்த வயதுடையவர்களுக்கு செலுத்த மாவட்டத்திற்கு 39 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.
அரசு வழிகாட்டுதலுக்காக
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். இதனால் இந்த வயதுடையவர்களுக்கு செலுத்துவதற்காக முதற்கட்டமாக மாவட்டத்திற்கு கோவேக்சின் 5 ஆயிரத்து 900 டோசும், கோவிஷீல்டு 33 ஆயிரத்து 700 டோசும் என மொத்தம் 39 ஆயிரத்து 600 டோஸ் வந்துள்ளது. இருப்பினும் இன்னும் இந்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அரசு வழிகாட்டுதல்கள், ஆணைகள் வரவில்லை. இந்த ஆணைகளில் உள்ள அறிவுரையின்படி தான் தடுப்பூசி செலுத்தப்படும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதே முறை பின்பற்றப்படுகிறதா? என்பது தெரியவில்லை. இதனால் தற்போது தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் வந்தவுடன் அது தொடர்பாக தடுப்பூசி செலுத்தப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

Next Story