திருக்கோவிலூர் அருகே சாராயம் கடத்தல் டிராக்டர் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே சாராயம் கடத்தல் டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2021 9:18 PM IST (Updated: 21 May 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே சாராயம் கடத்தல் டிராக்டர் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள குரக்கன்தாங்கல் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் குரக்கன் தாங்கல் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது அந்தவழியாக வந்த டிராக்டரை வழிமறித்தனர். உடனே டிரைவர் டிராக்டரை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனை செய்தபோது அதில் 5 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டு பிடித்தனர். பின்னர் டிராக்டருடன், சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் அதே ஊரை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார்(வயது 19) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story