சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சையளிக்க வேண்டும்அமைச்சர் காந்தி பேச்சு


சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சையளிக்க வேண்டும்அமைச்சர் காந்தி பேச்சு
x
தினத்தந்தி 21 May 2021 10:39 PM IST (Updated: 21 May 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா நகராட்சி பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி சளி, காய்ச்சல் இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி கூறினார்.

வாலாஜா

ஆலோசனை கூட்டம் 

வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.,, நகராட்சிகள் மண்டல இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் வரவேற்றார். 

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
 வாலாஜாப்பேட்டை நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகராட்சி 24 வார்டுகளிலும் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்தல் போன்ற தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.  சிறப்பு முகாம்கள் நடத்தி சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை
 அளிக்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பு கவசம்

தொடர்ந்து துப்புரவு பணியாளர்களை அழைத்து நகராட்சி மூலம் அவர்களுக்கு முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். அதற்கு பாதுகாப்பு கவசமும் கடந்த 4 மாதங்களாக வழங்கவில்லை என துப்புரவு பணியாளர்கள் புகார் தெரிவித்தனர். 

இதனையெடுத்து அமைச்சர் ஆர்.காந்தி ஆணையாளரிடம் துப்புரவு பணியாளர்களுக்கு ஏன் பாதுகாப்பு கவசங்களை வழங்கவில்லை, அவர்களுக்கு தேவையான முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்கள் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

Next Story