நீடாமங்கலம் கடைவீதியில் அதிகாரிகள் ஆய்வு
நீடாமங்கலம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கை மீறிய 10 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கை மீறிய 10 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் பகுதியிலும் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் நீடாமங்கலம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என மன்னார்குடி வருவாய்கோட்ட அலுவலர் அழகர்சாமி, மன்னார்குடி துைண போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் நீடாமங்கலம் தாசில்தார் மணிமன்னன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அபராதம்
ஆய்வின் போது ஊரடங்கை மீறிய 10 கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story