2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2021 10:43 PM IST (Updated: 21 May 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறை மீறியதாக 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே மணியாரம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியாரம்பட்டியை சேர்ந்த சிவா (வயது 23), வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் திருப்பதி (23) ஆகிய 2 பேர் காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதனால் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஓட்டி சென்ற 2 மோட்டார் சைக்கிள்களையும் உலகம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story