மின்னல் தாக்கி 3 பேர் பலி
மின்னல் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கமுதி,
கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, கமுதி அருகே செய்யாமங்கலம் முனியனேந்தல் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது50) என்பவர் வடுகநாதபுரம் வயல் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48), மருதூரை சேர்ந்த முருகன்(43) ஆகியோர் வயலுக்கு சென்றபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story