குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு


குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 21 May 2021 11:42 PM IST (Updated: 21 May 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி சிறுவன் இறந்தான்.

புதுக்கோட்டை, மே.22-
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் கவின் (வயது9). நேற்று கோபால் தனது மகன் கவினுடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றார். அங்கு கவின் குளித்த போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளங்களில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story