ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு


ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 21 May 2021 11:54 PM IST (Updated: 21 May 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

நினைவு நாளைெயாட்டி ராஜீவ்காந்தி சிைலக்கு காங்கிரசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

காரைக்குடி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி காரைக்குடி பல்கலைக்கழக சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, நகர செயலாளர் குமரேசன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அங்கு வந்தவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினார்.
அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவுப் பொருட்கள், பழங்கள், முககவசம், சானிடைசர் போன்றவைகளை வழங்கினார். காரைக்குடி ஐந்து விலக்கு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினார்.

Next Story